இனி இலவச திருமண உதவி தொகை 50,000 ரூபாய்.! வெளியான அரசாணை.!

Default Image

இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தொடர்பான அரசாணையில், திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000 லிருந்து ரூ.20,000-ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.

tn22

இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி, இன்னும் 283 ஏழை, எளிய ஜோடிகளுக்கு திருக்கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி ஆணையிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் ரூ.20,000, மணமகன் ஆடை, மணமகள் ஆடை ரூ.3,000, ரூ.2,000ல் 20 நபர்களுக்கு உணவு மற்றும் பீரோ. கட்டில், மெத்தை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரூ.50,000 இலவச திருமணம் திட்டச் செலவினத் தொகையில் அடங்கும்.

marriage22

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer