எச்சரிக்கை…எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்படலாம்..! என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி

Default Image

எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ்,  ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கு இடையே உள்ள நிலநடுக்க அதிர்வின் இடைவெளியை வைத்து பார்க்கும் பொழுது, உத்தரகாண்டில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

பூமியின் மேற்பரப்பில் எண்ணற்ற டெகட்டானிக் தட்டுகள் உள்ளது. இந்த தட்டுகள் வருடத்திற்கு 5 செ.மீ வரை நகர்கிறது. இவ்வாறு நகர்வது இமயமலையில் அழுத்ததை அதிகரிக்கிறது என்றும் இது மிக பெரிய  பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்