ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது..! எதற்கு ..?
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் சாந்தா கோச்சாரைக் காலவரையற்ற விடுப்பு எடுக்குமாறு கேட்டுக்கொள்ளவில்லை என வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் க்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியதற்குக் கைம்மாறாகச் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வேணுகோபால் தூத் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், ஐசிஐசிஐ வங்கியும் விசாரணையை நடத்தத் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயல் அலுவலரான சாந்தா கோச்சாரைக் காலவரையற்ற விடுப்பு எடுத்துக்கொள்ள ஐசிஐசிஐ வங்கி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள வங்கியின் செய்தித் தொடர்பாளர், முன்கூட்டியே திட்டமிட்ட விடுப்பைத் தான் சாந்தா கோச்சார் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.