அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவியின் 2 படங்கள்.!
நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக அடுத்த அடுத்த மாதங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளது.
அதன்படி, அவர் தற்போது இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்துள்ள “அகிலன்” திரைப்படம் வருகின்ற மார்ச் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக, ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் 2 ” திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எனவே, மார்ச் 10 அகிலன் திரைப்படமும், ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஜெயம் ரவி நடித்த 2 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இவர் தற்போது நடித்து வரும் இறைவன் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.