753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது!
பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது.
தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சரை காவல் விருது வழங்கப்பட்டது. பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது வழங்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இன்று நடந்த விழாவில் 753 காவலர்களுக்கு காவல் விருதுகளை வழங்கி கவுரவித்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.