தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞரணி, மாணவரணி துணை நிற்கும் – அமைச்சர் உதயநிதி
டெல்லியில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழக அரசு, திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி என்றென்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ட்வீட்.
டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த பதிவில், ‘டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மீது பல்கலைக்கழக நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தபட்டுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழக அரசு, திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி என்றென்றும் துணை நிற்கும்!’ என தெரிவித்துள்ளார்.
I have spoken to the affected students and promised them that our party will stand with them. (3/3)
— Udhay (@Udhaystalin) February 21, 2023