பிளாக்பஸ்டர்…மக்கள் கொண்டாடும் “டாடா”.! மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கவின்,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டாடா. இந்த திரைப்படத்தை இயக்குனர் கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். காதல் செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் கொண்ட இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், டாடா திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்து மிக்பெரியை வெற்றிப்படமாக மாறியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டாடா திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. எனவே படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவாதல் தமிழகத்தில் படத்தின் திரையரங்கு எண்ணிகையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டாடா திரைப்படம் வெற்றியை பெற்றுள்ள நிலையில், விரைவில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.