தூத்துக்குடி சமூகவிரோதிகள் ஊடுரூவல் கருத்து:ரஜினிகாந்த் மீது குவிந்த புகார்கள்
டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகங்களில்,தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதாக கூறிய கருத்து குறித்து ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாம்தமிழர் கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது எப்படித் தெரியும் என்றும், அவர்கள் யார் என்பது குறித்தும் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேபோல், சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவரும் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தக் கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதனிடையே, ரஜினிகாந்திற்கும், அவரது இல்லத்திற்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.