தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5கோடி – பாமக நிறுவனர் ராமதாஸ்
பள்ளி, கல்லூரி, நீதிமன்றத்தில் தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்.ராமதாஸ் பேச்சு.
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி பரப்புரை பயணத்தை சென்னையில் இருந்து மதுரை வரை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பரப்புரை பயணம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழை தேடி விழிப்புணர்வு பயணம் என்ற இந்த நிகழ்வானது இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5 கோடி பரிசு
அன்னை தமிழை மீட்க என்ற முழுக்கத்துடன் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய டாக்.ராமதாஸ், பள்ளி, கல்லூரி, நீதிமன்றத்தில் தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5 கோடி பரிசு தருகிறேன்.
தமிழ் இருக்கு என்று யாரும் சொல்லமுடியாது; அப்படி சொன்னால் பொய் சொல்கிறார்கள் என அர்த்தம் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் எங்கே தமிழ் என்று கேட்கும் நிலை உள்ளது; அனைத்து இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.