கஞ்சா நடமாட்டம்.! 4 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்.! ஏடிஜிபி வனிதா பேட்டி.!
தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் பெருமளவு குறைந்துளளது. இதுவரை 4 காவலர் கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என ரயில்வே ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்தை சேர்ந்தார்களை விழுப்புரத்தை சேர்ந்த மஹிமைதாஸ் என்பவர் ஓடும் ரயிலில் தாக்கிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இது போல ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 வருடம் சிறை தண்டனை வரை கிடைக்கும் என ரயில்வே துறை ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆபரேஷன் கஞ்சா : மேலும் அவர் கூறுகையில், கஞ்சா நடமாட்டம் பற்றியும், அதனை தடுக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை பற்றியும் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ஆபரேஷன் கஞ்சா 2, 3யில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டது. குற்றவாளிகள் முக்கிய ரயில் நிலையத்தில் காவல்துறை சோதனை அதிகம் இருக்கும் என அறிந்து மற்ற ரயில் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.
4 காவலர்கள் சஸ்பெண்ட் : இதனை கண்டுபிடித்து இதற்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் ஒரு தனிப்படை ஆய்வாளர் உட்பட 4 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று கூட 40 கிலோ கஞ்சா பிடித்துள்ளோம். கடந்த 19ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 220 கிலோ கஞ்சா பிடித்துள்ளதாகவும், 27 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், இந்த சோதனைகள் தொடர்ந்து கஞ்சா நடமாட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது எனவும் ரயில்வே துறை ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.