தமிழ்நாட்டில் முதன்முறையாக “உமேஜின்” மாநாடு – அமைச்சசர் மனோ தங்கராஜ்
235 சேவைகளை தகவல் தொழில்நுட்பத்துறை ஆன்லைன் மூலமாக வழங்கி வருகிறது என அமைச்சசர் மனோ தங்கராஜ் பேச்சு.
தமிழ்நாட்டில் முதன்முறையாக உலகளாவிய தரத்தில் உமேஜின் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சசர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றி பேசிய அமைச்சசர் மனோ தங்கராஜ், தமிழ்நாட்டில் முதன்முறையாக உலகளாவிய தரத்தில் உமேஜின் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. உமேஜின் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தொழில்நுட்பம் மூலமாக எட்ட திட்டமிட்டுள்ளோம். தகவல் தொழில்நுட்பம் என்றாலே தமிழ்நாடு தான் என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். 235 சேவைகளை தகவல் தொழில்நுட்பத்துறை ஆன்லைன் மூலமாக வழங்கி வருகிறது என்றும் இல்லம்தோறும் இணையம் திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.