உள்ளூர் விடுமுறை விடவும், டாஸ்மார்க் கடைகளை மூடவும் யாருக்கு அதிகாரம் உள்ளது? – உயர்நீதிமன்ற கிளை
திருவிழாக்களின் போது எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கண்ணன் என்பவர் மாசி மகா விழாவுக்கு கும்பகோணத்திற்கு உள்ளூர் விடுமுறை விடவும், மதுக்கடைகளை மூடவும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
உள்ளூர் விடுமுறை
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் திருவிழாக்களின் போது எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? உள்ளூர் விடுமுறை அளிக்கவும், டாஸ்மார்க் கடைகளை மூடவும் யாருக்கு அதிகாரம் உள்ளது?
உள்ளூர் விடுமுறை விட, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு என்று தனியாக அரசாணை எதுவும் உள்ளதா? என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.