கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி.! முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.!?

Default Image

இயக்குனர் கௌதம் மேனன் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கெளதம் மேனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Gautham Vasudev Menon
Gautham Vasudev Menon [Image Source : Google ]

இந்த படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கெளதம் மேனன் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கவுள்ளார் என்பதற்கான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, அவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

Vijay Sethupathi new movie
Vijay Sethupathi new movie [Image Source : Google ]

கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர்  அபிஷேக்பச்சனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கான இறுதிக் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi
Vijay Sethupathi [Image Source : Google ]

மேலும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் சேதுபதி கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்