#ElectionBreaking : ஈரோடு கிழக்கில் 58 போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 58 காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வரும் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முனைப்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு
இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 58 காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. காவலர்கள் வாக்குப்பதிவு நாளின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் முன்கூட்டியே தபால் மூலம் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.