#BREAKING: மார்ச் 5, 6ல் இந்த 5 மாவட்டங்களில் முதலமைச்சர் கள ஆய்வு!

Default Image

முதல்வர் முக ஸ்டாலின் மார்ச் 5,6ஆம் தேதிகளில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் கள ஆய்வு மேற்கொளக்கிறார்.

கள ஆய்வில் முதலமைச்சர்:

CM21

தமிழ்நாட்டில் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை பிப்.1-ஆம் தேதி தொடங்கி வைத்தார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ்  முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர். கள ஆய்வில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் விவாதிக்கப்படும்.

கள ஆய்வின் அம்சங்கள்:

cmchennaimeeting

இந்த கள ஆய்வின் போது, குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், பொதுக் கட்டமைப்பு வசதிகள் போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை:

MK STALIN TN CM

அண்மைக் காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். அதேபோல் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டங்களை தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்.

5 மாவட்டங்களில் களஆய்வு:

mk stalin tn cm

இந்த நிலையில் , மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், விவசாய பிரதிநிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்