Today’s Live : ரயிலில் பயணத்தில் பார்பி…! வீடியோ வைரல்…!
பார்பி ஷீட் மாஸ்க் :
ரயில் பயணத்தின் போது தனது முகத்தில் பார்பி (BARBIE) போன்ற முக உருவம் கொண்ட ஷீட் மாஸ்க்கை அணிந்து வெளியிட்ட பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
2023-02-21 04:07 PM
சமூக உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி பெண்கள் அதிகாரம் :
அபுதாபியில் நடைபெறும் இரண்டு நாள் பெண்கள் உலக உச்சி மாநாடு 2023 இல் வீடியோ செய்தி மூலம் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,”உலகில் அமைதி, சமூக உள்ளடக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரே வழி பெண்களுக்கு அதிகாரமளிப்பதுதான்” என்ற முழு நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.
2023-02-21 02:39 PM
உள்ளூர் விடுமுறை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக்கிளை கேள்வி :
திருவிழாக்களின் போது உள்ளூர் விடுமுறை எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது, இதற்காக அரசாணை ஏதேனும் உள்ளதா? என்றும் விடுமுறையின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி கேள்வி எழுப்பியுள்ளது.
Readmore : உள்ளூர் விடுமுறை விடவும், டாஸ்மார்க் கடைகளை மூடவும் யாருக்கு அதிகாரம் உள்ளது? – உயர்நீதிமன்ற கிளை
2023-02-21 01:27 PM
சிவசேனா பார்லிமென்ட் கட்சி :
சிவசேனா பார்லிமென்ட் கட்சி அலுவலகத்திற்காக, பார்லிமென்ட் மாளிகையின் அறை எண் 128, சிவசேனா பார்லிமென்ட் கட்சிக்கு (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) ஒதுக்கப்பட்டுள்ளது.
Room No. 128, Parliament House has been allotted to the Shiv Sena Parliamentary Party (Eknath Shinde faction) for the office of the Shiv Sena Parliamentary Party. pic.twitter.com/cE7r9MfvQM
— ANI (@ANI) February 21, 2023
2023-02-21 01:08 PM
வடகொரியா ஏவுகணை சோதனை:
வடகொரியா நாடானது அண்மையில் பசுபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஏவுகணை சோத்தனியானது தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புகைச்சலை உண்டு செய்துள்ளது என்றே கூறப்படுகிறது.
Readmore : பசுபிக் பெருங்கடலில் மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வட கொரியா.!
2023-02-21 11:26 AM
மேகாலயா தேர்தல் 2023 :
மேகாலயாவின் சோஹ்ராவில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி (UDP) வேட்பாளரான டைட்டோஸ்டார்வெல் சைன் (Titosstarwell Chyne) “யூடிபி ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசாங்கத்தை வழிநடத்துவதே எங்கள் இலக்கு. யூடிபி இல்லாமல் யாரும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. நாங்கள் 15 க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவோம்” என்று கூறினார்.