சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும்!பிரதமர் நரேந்திர  மோடி

Default Image

பிரதமர் நரேந்திர  மோடி,இந்தியா மற்றும் சீனா உலக வர்த்தகத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ((Nanyang Technical University)) மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியாவும் சீனாவும் பன்னெடுங்காலமாக சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அதில் எப்போதும் மோதல் போக்கு இருந்ததில்லை என்றும், அதேபோல் தற்போதும் உலக வர்த்தக உறவை மேம்படுத்துவதில் இருநாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

21 ஆவது நூற்றாண்டில் உலக நாடுகள் ஆசிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஆசிய நாடுகள் உணர வேண்டும் என்பதே முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத் தடைகளை தகர்க்க உதவுவதால், அது மேலும் மலிவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்