ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. அந்த வகையில், தேர்தல் களத்தில் பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் தென்னரசு அவர்கள் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி.வேலுமணி
அந்த வகையில், அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், டீ ஊற்றுதல், புரோட்டா போடுதல், இஸ்திரி பண்ணுதல் என நூதனமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி இவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.