நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றார்!
மணிப்பூர் ஆளுநராக இருந்து மாற்றப்பட்ட இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்பு.
புதிய ஆளுநர்கள் நியமனம்:
நாட்டில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதில், 7 பேர் வேறு மாநிலங்களில் இருந்து மாற்றம் செய்யப்பட்டவர்கள், 6 பேர் புதிய ஆளுநர்களாக ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த 13 மாநிலங்களுக்கு நியமித்த புதிய ஆளுநர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இல.கணேசன் பதவியேற்பு:
அதேபோல மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். நாகலாந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.