வெகு விரைவில் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை.! அமைச்சர் துரைமுருகன் உறுதி.!

Default Image

இன்னும் கொஞ்ச நாளில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை கொடுக்க போகிறோம். –  திமுக அமைச்சர் துரைமுருகன் பேச்சு. 

திமுக ஆட்சி வருவதற்கு முன்னர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்று இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை கொடுக்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், இது குறித்து எதிர்கட்சியினரும் அவ்வப்போது விமர்சித்து வருவதும் உண்டு.

1000 ரூபாய் உதவி தொகை : இந்த நிலையில் தான் தற்போது 1000 ரூபாய் உதவி தொகை குறித்து  அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். அவர் நேற்று தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் எனும் பெருமையை பெற்ற மறைந்த சத்யவானி முத்துவின் நூற்றாண்டு விழாவில் பேசுகையில், இதனை குறிப்பிட்டார்.

கைராசி  : அவர் பேசுகையில், இன்னும் கொஞ்ச நாளில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை கொடுக்க போகிறோம். என குறிப்பிட்டு பேசினார். மேலும் என்னை திமுக உறுப்பினராக சேர்ந்ததே அம்மையார் சத்யவானி முத்துதான். அவரது கைராசி தான் நான் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளேன். என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்