மது பிரியர்களே உஷார்.. உங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.! போக்குவரத்து காவல் கடும் எச்சரிக்கை.!

Default Image

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக இதர சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதத்தை வசூலிக்க அவர்களின் வாகனம், அல்லது மற்ற சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, சாலை விதிகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது குடித்துவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகிறது என்பதால் அதற்கான விதிகளை போக்குவரத்து காவல்துறை தற்போது கடுமையாக விதித்துள்ளது. ஏற்கனவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதத்தொகையாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

chennai city trafic rules1

இந்த அபராதத் தொகையை கட்டத்தவறினால் சம்பந்தப்பட்டவர்களின் வாகனமோ, வேறு எந்தவித வாகனமோ அல்லது இதர அசையும் சொத்துகள் நீதிமன்றம் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்துக்காவல்துறை அறிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்