பழைய பென்ஷன் திட்டம் வேண்டும்..! முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்..!
ஹரியானாவில் 70,00க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முதல்வர் மனோகர் லால் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் வீட்டை அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். முன்னதாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று பஞ்ச்குலாவில் உள்ள ஹரியானா முதலமைச்சர் மனோஹர் லால் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திவிட்டனர், ஹரியானாவில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு பாஜக செவி சாய்க்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதையடுத்து சுமார் 70,000 அரசு ஊழியர்கள் இணைந்த இந்த போராட்டத்தில் ஏதேனும் கலவரங்கள் வருவதை தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#Panchkula: सरकारी कर्मचारियों का सीएम आवास के बाहर प्रदर्शन, पुरानी पेंशन योजना (OPS) की बहाली को लेकर विरोध प्रदर्शन किया.#OPS #Haryana #opsprotest pic.twitter.com/40VjEcWkjM
— News Times Today (@News_TimesToday) February 19, 2023
#WATCH | Government employees protest near #Haryana CM’s residence in Panchkula demanding restoration of Old Pension Scheme; Large police force deployed pic.twitter.com/UypaIuVKHF
— NewsMobile (@NewsMobileIndia) February 19, 2023