நடுரோட்டில் வெறிச்செயல்..கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கறிஞர்..! 2 பேர் கைது
நடுரோட்டில் வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோத்பூரில் ஜுக்ராஜ் சவுகான் என்ற வழக்கறிஞர் மாலை 6 மணியளவில் தனது பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நடு ரோட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரை வழி மறைத்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென தாக்கியவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அவரது மார்பில் குத்தியதில் கீழே விழுந்துள்ளார். இதனால் காயமடைந்த சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#WATCH राजस्थान: जोधपुर में एक वकील की चाकू मारकर हत्या का CCTV वीडियो सामने आया।
जोधपुर ACP नजीम अली खान ने कहा, अनिल चौहान और मुकेश चौहान ने इस घटना को अंजाम दिया है। आरोपी को गिरफ़्तार कर लिया गया है, पूछताछ जारी है। (18.02) pic.twitter.com/16bXxkKVOb
— ANI_HindiNews (@AHindinews) February 19, 2023
வழக்கறிஞர் சவுகானை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனில் மற்றும் முகேஷ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசாரை மேலும் கூறினர்.