பிரபல நடிகர் தாரக ரத்னா மாரடைப்பால் காலமானார்..!

பிரபல தெலுங்கு நடிகர் தாரக ரத்னா மாரடைப்பால் காலமானார் : 

பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் தாரக ரத்னா மாரடைப்பால் காலமானார். ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் நடத்திய பாதயாத்திரையில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஜூனியர் என்டிஆர்-ன் உறவினரான தாரக ரத்னா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவின் இல்லத்திற்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாண்ராம் நந்தமுரி ஆகியோர் வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து அஞ்சலி செலுத்தினர். சமூக வலைதளங்களில் பல முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment