சாதாரண விசாரணையை மனித உரிமை மீறலாக கருத முடியாது – ஐகோர்ட்
சாதாரண போலீஸ் விசாரணையை மனித உரிமை மீறலாக கருத முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
சாதாரணமான போலீஸ் விசாரணையை மனித உரிமை மீறலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், மனித உரிமை மீறல் வழக்கில் சென்னை காவல் உதவி ஆணையருக்கு எதிரான உத்தரவை செய்தது உயர்நீதிமன்றம். ஆரம்ப நிலையிலேயே மணித் உரிமை மீறல் கூறுவது காவல்துறையை ஊக்கக்குறைவு செய்ய காரணமாகிவிடும் என காவல் உதவி ஆணையர் லட்சுமணன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.