ஈரோடு இடைத்தேர்தல் – வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

Default Image

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

பெயர், சின்னம் பொருத்தும் பணி:

ec2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. மறுபக்கம், தேர்தல் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பெயர், சின்னத்தை வாக்கு இயந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது.

சின்னம் ஒதுக்கீடு:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதன்பின் 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 10-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார்:

votemission

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், சின்னம்  வாக்குச்சாவடி முன்பு ஒட்டும் வேட்பாளர்கள் போட்டோ முகவரி அடங்கிய போஸ்டர்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்