‘காந்தாரா’ பட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது.!
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்தது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குககளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் மானசி சுதிர், கிஷோர் குமார் ஜி, அச்யுத் குமார், தீபக் ராய் பனாஜே, பிரமோத் ஷெட்டி, ஸ்வராஜ் ஷெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
கர்நாடக மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் வசூலை போலவே விருதுகளையும் குவித்து வருகிறது. ஒரு நல்ல படத்திற்கு பெரிய ஹீரோ வேண்டாம் நல்ல கதை இருந்தால் போதும் படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்பதை இந்த படம் நிரூபித்து காட்டியது என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2023) தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு “சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்” என்ற பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை வழங்கும் விழா வரும் 20ஆம் தேதி மும்பையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.அதில் ரிஷப் ஷெட்டிக்கு விருது வழங்கப்படவுள்ளது.
மேலும், இந்த காந்தாரா திரைப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.450 கோடிக்கு மேல் வசூலை குவித்து மிரட்டியது. விரைவில் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.