காதில் பூ வைத்து சட்டசபைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.! பட்ஜெட்டுக்கு நூதன முறையில் எதிர்ப்பு…
காதில் பூவுடன் கர்நாடக பட்ஜெட் கூட்ட தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த பட்ஜெட் மக்களை முட்டாளுக்கும் என கூறி விமர்சனம்.
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பசுவராஜ் பொம்மை இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வருடம் கர்நாடக மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த இடைக்கால பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
காதில் பூ : இந்த பட்ஜெட் கூட்டத்தில் தொடருக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வருகையில் காதில் பூ வைத்து வந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் காதில் பூ வைத்து சட்ட மன்றத்திற்குள் நுழைந்தார். கர்நாடக மக்களை, ஆளும் பாஜக அரசு முட்டாளாக்கி வருவதாகவும். இந்த பட்ஜெட் எப்படியும் மக்களை ஏமாற்றும் விதத்தில் இருக்கும் என்பதை உணர்த்தவும் காதில் பூ வைத்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.
ராமர் கோவில் : இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பசுவராஜ் பொம்மை கர்நாடகாவின் ராமநகராவில் அயோத்தி ராமர் கோவில் போல ஓர் பெரிய ராமர் கோவில் ஒன்று இங்கு கட்டப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கோவில்கள், மடங்கள் மேம்பாட்டுக்காக அதன் வளர்ச்சி நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அதில் அறிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் : மேலும், அந்த ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கூப்பிட்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம். எனவும் கூறினார். மேலும், பல்வேறு திட்டங்கள் பற்றியும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்தார். நூறு கோடியில் பள்ளிகள் கூட்டமைப்பு, 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.