வட கொரியா பிரதமர் கிம் ஜாங் உன்னின் புதிய உத்தரவு..!
வடகொரியா அதிபர் கிம் ஜாங் தன் மகளின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவின் பிரதமர் கிம் ஜாங் உன், அவரது மகளின் பெயரை (ஜூ ஏ) நாட்டிலுள்ள வேறு எந்த பெண்ணிற்கும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதிபர் கிங் ஜாம் தனது பத்து வயது மகளான ஜூ ஏ வின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்தப் பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் அவர்களது பெயரை மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வட மற்றும் தென் பியாங்யாங்கில் வசிப்பவர், ஜூ-ஏ என்ற பெண்களின் பிறப்புச் சான்றிதழை மாற்ற உள்ளூர் அரசாங்கங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. முன்னதாகவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மக்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.