நெல்மூட்டைங்கள் மழையில் நனைவது வேதனை அளிக்கிறது.. தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் நெல் அறுவடை செய்த பிறகு, அதனை கொள்முதல் செய்வதற்காக, குவித்து வைக்கப்பட்டு இருக்கும். பல்வேறு சமயங்களில் மழை பெய்து அந்த நெல் மூட்டைகள் நனைந்து ஈரப்பதம் அதிகமாகி விடும். பல்வேறு சமயங்களில் அது வீணாகி விடுகிறது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு : இது குறித்து,மதுரை மேலூரில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க குடோன் அமைத்து தர வேண்டுமென பொதுநல வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசுக்கு உத்தரவு : இந்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், பல்வேறு மாவட்டங்களில் மலையில் நெல் மூட்டைகள் நனைந்து உள்ளது வேதனை அளிக்கிறது. மழையினால் நனைந்து நெல் மூட்டைகள் சேதமாவதை ஊடங்கங்கள் வாயிலாக அவ்வப்போது பார்க்க நேர்கிறது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.