உத்திர பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!
உத்திர பிரதேசத்தில் சுல்தான்பூர் பணிமனையில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ரயில் எஞ்சின்கள் பயங்கரமாக சேதமடைந்துள்ளன.
இன்று (பிப்ரவரி 16) அதிகாலை உத்திர பிரதேச மாநில சுல்தான்பூர் ரயில் பணிமனையில்யில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், சரக்கு ரயில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து காரணாமாக எட்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
காரணம் : இந்த விபத்து காரணமாக சுல்தான்பூர் ரயில் பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் லக்னோ-வாரணாசி ரயில்வே வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 2 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுல்தான்பூர் சந்திப்பின் தெற்கு கேபின் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சீரமைப்பு பணிகள் : தற்போது கிரேன்கள் உதவியுடன் ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக வந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இரண்டு சரக்கு ரயில்களின் இன்ஜின்களும் சேதமடைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.