முத்தக்காட்சியில் இந்த காரணத்துக்காக தான் நடித்தேன்… உண்மையை உளறிய அனிகா.!
அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்தர். 18 வயதாகும் இவர் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ எனும் படத்தில் நடித்ததன் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
‘ஓ மை டார்லிங்’ படத்தை அன்சார் ஷா என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த திரைப்படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டிரைலரில், அனிகா நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் முதல் படத்திலேயே முத்தக்காட்சியா..? என கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து, சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அனிகா முத்தக்காட்சியில் நடித்த காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறும் போதே முத்தக்காட்சியை பற்றி சொன்னார். அந்த காட்சிகள் படத்திற்கு தேவையானதாக இருந்தது. நீங்கள் படத்தை பார்க்கும் பொது அந்த காட்சிகள் உங்கள் கண்களுக்கு தவறாக தெரியாது” என கூறியுள்ளார்.