தேர்தல் பணிமனைகளுக்கு சீல் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Default Image

ஈரோட்டில் அதிமுக, திமுக தேர்தல் பணிமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் சீல் வைக்கும் பணி தீவிரம்.

சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்:

ERODEELECTION27

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கப்பட்டது. தேர்தலை தொடர்ந்து, பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக, அதிமுக இடையே போட்டி:

 dmkadmk16

இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவினாலும், திமுக, அதிமுக இடையே தான் காடும் போட்டி நிலவுவதாக கள ஆய்வு தெரிவிக்கின்றன. இருப்பினும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுகவில் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள், ஆளும் அரசின் அமைச்சர்கள், எதிர்க்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ஈரோட்டில் முகாமிட்டு போட்டிபோட்டு கொண்டு  தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்ட்டி கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை:

erodeelectiontn

ஒருபக்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பிரதான கட்சிகள், மறுபக்கம் விதிகளை மீறுதல், அனுமதியின்றி செயல்படுதல் உள்ளியிட்டவற்றை கண்காணித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இன்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். அனுமதியின்றியும் தேர்தல் பணிமனை செயல்பட்டதாகவும், தேர்தல் விதிகளை மீறியதாக கூறி, தேர்தல் பணிமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சீல் வைக்க அதிமுகவினர் எதிர்ப்பு:

ஈரோடு கிழக்கு தொகுருதியில் 14 இடங்களில் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் செயல்படுவதாக கூறி சீல் வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியில்லாத அதிமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைக்க எதிரிபு தெரிவித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தேர்தல் பணிமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், பிற பணிமனைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைப்பு:

erode16

அனுமதியின்றி அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்க விடாமல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்படி, 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக, திமுக பணிமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்று தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்