பிபிசி அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை.!
பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். பிப்-14 அன்று காலை 11:30 மணிக்கு தொடங்கிய இந்த வருமான வரி சோதனை இன்றும் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிபிசி அலுவலகத்தில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், வெளியிட்ட மோடி குறித்த ஆவணப்படம் தடை செய்யப்பட்ட நிலையில் சில இடங்களில் தடையை மீறி வெளியானதையடுத்து தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.