விரைவில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் புது அப்டேட்..! செம கடுப்பில் அஜித் ரசிகர்கள்..?
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தற்பொழுது பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, சந்திரமுகி 2, AK 62 உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள உள்ள இத்தனை டாப் படங்களையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் விரைவில் ரஜினி படத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவிருந்ததாக முன்னதாக ஒரு தகவல் பரவி இருந்தது அந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது.
எனவே அந்த படத்திற்கான அறிவிப்பை சில தினங்களில் அறிவிக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதனால் அஜித் ரசிகர்கள் சற்று கோபமாக இருக்கிறார்கள். ஏனென்றால், அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது.
கடந்த சில நாட்களாகவே ஏகே62 படத்தின் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் யார் இயக்குனர் ..? யார் இசையமைப்பாளர்..? என்பது குறித்த தகவலை லைக்கா நிறுவனம் அறிவிப்பார்கள் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர் ஆனால் தற்பொழுது லைக்கா நிறுவனம் ரஜினி படத்தை தயாரிக்க உள்ளதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதால் அஜித் ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்கள். மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள 24-வது படத்திற்கான அப்டேட் இன்று காலை 11-மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.