குழந்தை கடத்தல் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி!
குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி சண்முகவள்ளிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
திருச்சியில் குழந்தையை கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைதான சண்முகவள்ளியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் தரக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
லால்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பிரபு மற்றும் ஜானகி ஆகியோருக்கு குழந்தை பிறந்த்துள்ளது. பிர்தந்த குழந்தையை தந்து தோழி சண்முகவள்ளியின் உதவியுடன் விற்பனை செய்துள்ளார் பிரபு. குழந்தை விற்பனை செய்தபோது உரிய பணம் கிடைக்காததால் குழந்தையை கடத்திவிட்டதாக போலீசில் பிரபு புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞர் பிரபு, ஜானகி, தோழி சண்முகவள்ளி ஆகியோர் குழந்தையை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்து போலீஸ் சிறையில் அடைத்த நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி சண்முகவள்ளி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் கிளை மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.