3 மாநிலங்கள்.. 40 இடங்கள்… தீவிர சோதனைகள் குறித்து என்ஐஏ விளக்கம்.!
கோவை கார் வெடிப்பு, மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக 3 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது என என்ஐஏ விளக்கம்.
இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை நிறைவு பெற்றதை அடுத்து தற்போது என்ஐஏ தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகியவை தொடர்பாக தான் இந்த 3 மாநில சோதனை நடைபெற்றதாகவும், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 40 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனையில், பல்வேறு மின்னணு சாதனங்கள், 4 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்ற பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.