#BREAKING: கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் உயிரிழப்பு..!
கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகளும் திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றபோது மாயனூர் காதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர்.
ஆற்றில் சுழல் உள்ளதை அறியாமல் ஒரு மாணவி ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். ஆற்றில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற முயன்றபோது மற்ற 3 மாணவிகளும் சுழலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில் ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளும் உயிரிழந்துள்ளனர். மாணவிகளின் உடல்கள் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மாணவிகள் தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.