#BREAKING : கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்..! தேடுதல் பணி தீவிரம்..!
காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் மூழ்கினர்.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகள் காவிரி ஆற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீரில் மூழ்கிய மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.