கோவில் ஆகம விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.!
கோவில் ஆகம விதிகள் ஆய்வு குழுவில் சத்யவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் உள்ள ஆகம விதிகளை கண்டறிய தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழுவில் சத்யவேல் முருகன் இடம்பெற்று இருந்தார். இவரை உறுப்பினராக அரசு நியமித்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய ஆதி சைவ சிவாசாரியார்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது, கோவில்களில் உள்ள ஆகம விதிகளை கண்டறிய தமிழக அரசால் குழவில் நியமிக்கப்பட்ட சத்யவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த நியமனம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.