#Breaking : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .!
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் மேற்கு வெலிங்டன் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கமானது 6.1 ரிக்டர் அளவு என பதிவாகியுள்ளது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நியூசிலாந்து நேரப்படி இரவு 7.38 மணியளவில் பராபரமுவில் இருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் 48 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று மட்டுமே தற்போது வரை அறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து, இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும், இன்னும் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.