மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதம்! உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டம் என தகவல்

Default Image

தமிழக அரசு ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு மேலும் தாமதம் செய்தால் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர  மோடி இன்று வெளிநாட்டுப் பயணத்தை முடித்து இந்தியா திரும்புகிறார்.

இதனால் விரைவில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான ஆணை வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உறுதியளித்துள்ளார். தென்மேற்கு பருவ மழைக்காலத்திற்கு முன்பாக ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பாகவே கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இருப்பினும் இதுவரை மத்திய அரசுத் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details