#WT20WC2023: பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவிப்பு..!

Default Image

பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்துள்ளது.

மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகின்ற பிரிவு-எ (Group A) க்கான 8-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடுகிறது. இதில் வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்நிலையில் ஷமிமா சுல்தானா மற்றும் முர்ஷிதா காதுன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் டார்சி பிரவுன் மற்றும் மூனி வீசிய பந்தில் இருவரும் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து  அணியின் கேப்டன் நிகர் சுல்தானா (57) மற்றும் ஷோர்னா அக்டர் (12) பார்ட்னெர்ஷிப்பில் 69 ரன்கள் குவித்தனர். போட்டியின் 19.5 வது ஓவர் முடிவில் மருஃபா அக்டர் 1* ரன் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. தற்பொழுது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்