லியோ படத்தில் நடிக்காமல் சென்னை வந்த த்ரிஷா.? உண்மை காரணம் என்ன தெரியுமா..?
நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் த்ரிஷா நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுடைய ஜோடி இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் இவர்களுடைய ஜோடி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நடிகர் த்ரிஷா போன வேகத்தில் சென்னை திரும்பினார்.இதனால் பலரும் படத்தில் த்ரிஷாவிலகி விட்டதாக தகவல்களை பரப்பினர். பிறகு த்ரிஷா விலகவில்லை என அவருடைய தாயார் விளக்கம் கொடுத்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது திரிஷா படப்பிடிப்பிலிருந்து போனவர்கள் சென்னை திரும்பி அதற்கான காரணம் என்னவென்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து உள்ளது அது என்னவென்றால் , இந்த திரைப்படத்தில் சண்டையை இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவு பணியாற்றுகின்றனர்.
எனவே அவர்களுக்கு லியோ படத்தை தொடர்ந்தும் பல பெரிய படங்களில் சண்டை இயக்குனராக பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் லியோ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு வேறு படங்களில் கமிட்டாக உள்ளனர். இந்த நிலையில் முதலில் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விடலாம் என லியோ பட குழு முடிவு செய்து விஜய் வைத்து ஆக்சன் காட்சிகள் எல்லாம் எடுக்க தொடங்கியுள்ளனர். எனவே ஆக்சன் காட்சிகள் தானே எடுக்கிறார்கள் என்று த்ரிஷாசென்னைக்கு திரும்பி வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.