சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா நீங்கள்..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

Default Image

சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், காலையில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம்

இன்று அதிகமானோர் சர்க்கரை நோய் பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முதியோர்கள் மட்டுமின்றி குழந்தைகள் கூட இந்த சர்க்கரை நோய் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் பிரச்சனைகள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.

இந்த சர்க்கரை நோயை நமது உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம்  கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக ஒரு மனிதனுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாததாகும் அதிலும் சர்க்கரை நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் நேரம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும்.   தற்போது இந்த பதிவில் சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், காலையில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என பார்ப்போம்.

சோயா தோசை

பொதுவாகவே நம்மில் பலருக்கும் தோசை என்றாலே பிடித்தமான ஒரு உணவு தான். வழக்கமாக சாப்பிடும் தோசைக்கு பதிலாக சோயா தோசை சாப்பிடலாம் இதில் புரோட்டின் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் குறைவாகவும் உள்ளது.

ராகி ஊத்தப்பம்

ராகி உத்தப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு இந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது.

வரகு உப்புமா

வரகு உப்புமாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு என்று கூட சொல்லலாம். இதில் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. செரிமானத்தை சீராக்குவதுடன், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சன்னா சுண்டல் 

வெள்ளை சன்னா என்று அழைக்கப்படும் வெள்ளை நிற சுண்டலானது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்ல ஒரு உணவு. இதனை சக்கரை நோயாளிகள் தங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது ஆனால் ஒரு நாளைக்கு அரை கப்பிற்க்கும் மேல் சாப்பிடக்கூடாது.

ஓட்ஸ் இட்லி

 ஓட்ஸை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இது உடல் எடையை குறைக்க உதவுவது  உதவுகிறது. இந்த உணவினை சர்க்கரை நோயாளிகளும் சேர்த்துக் கொள்ளலாம்.  ஓட்ஸ் இட்லி செய்து, சில காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்