டாடா பிளாக் பாஸ்டர்…கவினுக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்த கமல்ஹாசன்.!?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான கவின் தற்போது ஹீரோவாக டாடா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில், நடிகர் கவின் சமிபத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பெற்றார். டாடா படத்தை பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாகவும், படத்தில் உங்களுடைய நடிப்பு அருமை எனவும் பாராட்டி இருந்தார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கவின் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் – கவின் சந்திப்பில் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, கமல்ஹாசன் தயாரிப்பில் கவின் ஒரு படம் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுடன் நல்ல நட்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.