பிரபாகரன் விவகாரம்: ஏதோ சதி உள்ளது.. சட்டத்தில் இடமிருந்தால் வழக்கு தொடருவோம் – மூத்த வழக்கறிஞர்

Default Image

சட்டத்தில் இடமிருந்தால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம் என மூத்த வழக்கறிஞர் துரைசாமி பேட்டி.

பழ.நெடுமாறன் பற்ற வைத்த நெருப்பு: 

paza

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். அவரின் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில் தான் இருக்கின்றனர் என்றும்  பிரபாகரன் விரைவில் வெளியே வருவார் எனவும் கூறி அதிர வைத்தார். அதுமட்டுமில்லாமல், பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என்றும் ஒரு நெருப்பை பற்ற வைத்தார். இதுதான் இப்போது ஹாட் நியூஸ்.

இலங்கை அரசு மறுப்பு:

lankangovt

பிரபாகரன் உயிருடன் உள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதை அடுத்து,  இலங்கை அரசு திட்டவட்டமாக அதனை மறுத்துள்ளது. இருப்பினும், பிரபாகரன் தொடர்பான நெடுமாறன் கூறியதை ஆராய்ந்து வரும் மாநில கியூ பிரிவு போலீசார் நெடுமாறன் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை ராணுவத்தால் படுகொலை:

prabhakaran14

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் அந்நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார் என தகவல் கூறப்பட்டது. பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் விடுதலை புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை. அன்று முதல் பிரபாகரன் குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது  உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி அதிர வைத்துள்ளார்.

கட்சிகளின் கருத்து: 

seemanvaiko

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறனின் கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இருப்பினும், நெடுமாறன் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது எனவும் வைகோ கூறியுள்ளார். இலங்கை போருக்கு பிறகு 15 ஆண்டுகளாக பிரபாகரன் பதுங்கியிருப்பார் என்பதை நாங்கள் நம்பவில்லை எனவும் சீமான் தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர் துரைசாமி பேட்டி:

durai14

இந்த நிலையில், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று வரும் செய்தி முற்றிலும் தவறான வதந்தி, வேண்டும் என்றே சில அரசியல் காரணத்திற்காக பரப்பப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்தார். அவர் கூறுகையில், 2009 ஆம் ஆண்டு பிரபாகரன் வீரமரணம் அடைந்தார், அவர் உடல் அடையாளம் காட்டப்பட்டு, மரியாதையுடன் தகனம் செயப்பட்டது.

ஏதோ சதி உள்ளது:

பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்று வந்த பிறகு பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில், ஏதோ சதி உள்ளது. பழ.நெடுமாறன் திராவிடர் கழகத்திற்கு எதிரானவர், இப்போது, பாஜகவிடம் லாபத்தை எதிர்பார்த்து விலைபோய்விட்டார். சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

p14

மேலும் அவர் கூறுகையில், பிரபாகரன் மீது இருந்த 2 வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டது. அவரது இறப்பு சான்றிதழ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் உள்ளது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது, நல்ல எண்ணத்தில் சொல்லப்படவில்லை என்றும் விரல் ரேகை அடிப்படையில் பிரபாகரன் இறப்பு சான்றிதழ், நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது எனவும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்