9 கிலோ தங்க நகைகள் கொள்ளை… குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏன்.? காவல் ஆணையர் விளக்கம்.!

Default Image

பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

கடந்த 10ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளையும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கற்களையும் ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. நள்ளிரவில் கடையின் ஷட்டர் பகுதியை வெல்டிங் மிஷின் வைத்து அறுத்து உள்ளே புகுந்து லாக்கரையும் வெல்டிங் வைத்து அறுத்து அதன் உள்ளிருந்த தங்க வைர நகைகளை அந்த கும்பல் கொள்ளை அடித்து இருந்தது.

தனிப்படைகள் : இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி பகுதி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று கூட கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகன விவரமானது வெளியாகியது.  கொள்ளையர்கள் தப்பிக்க இன்னோவா காரை பயன்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

வெளிமாநில கொள்ளையர்கள் : இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும்,  ஏற்கனவே 7 தனிப்படை பிரிவு போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கூடுதலாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய வாகன எண் போலியானது என தெரிவித்தார் .

வெளிமாநிலத்தில் விசாரணை : தற்போது உயர் அதிகாரிகள் தங்கள் காவல்துறை குழுவினருடன் வெளிமானத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கொள்ளையர்கள் மேலும், சில கடைகளுக்கும் திருட திட்டம் போட்டு இருந்துள்ளனர் என்பதையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்