எதிர்க்கட்சிகளின் கருத்துகள் அவர்களின் வயிற்றெரிச்சலை காட்டுகிறது – கே.எஸ்.அழகிரி

Default Image

காங்கிரேசின் வெற்றி ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதிகமாகி கொண்டே இருக்கிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.

தமிழக காங்கிரஸுக்கு பெருமை:

tncgs

ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோட்டு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் காண்கிறார். மூத்த தலைவர்களில் இளங்கோவன் ஒருவர். அவர் இடைத்தேர்தலை சந்திப்பது தமிழக காங்கிரஸ் பெருமையாக கருதுகிறது.

கொள்கை ரீதியிலான கூட்டணி:

dmkalliance14

இடைத்தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள தேசிய தோழர்கள் திரண்டு வந்து பணியாற்றுகிறார்கள். எங்களுடைய கூட்டணி ஒரு கொள்கை ரீதியிலான கூட்டணி. எங்கள் கூட்டணி தலைவர் ஸ்டாலின், தேர்தல் அறிவித்தவுடனே ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் நின்ற இடம், இதனால் அவர்களே நிற்க வேண்டும் என்று கூறி ஈரோடு கிழக்கு தொகுதியை எங்களுக்கு வழங்கினார்.

அதிமுகவின் சிறுமை:

epserode

கூட்டணிக்கு லட்சணம் என்பது இதுதான். நட்புக்கு இலக்கணம் என்பதும் இதுதான். எங்கள் கூட்டணி தலைவரும், மற்ற கூட்டணி கட்சிகளின் தோழர்கள், தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து, கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸுக்கு வாய்ப்பு வழங்காமல், அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக, அவர்களிடம் இருந்து பறித்து ஒரு சிறும்மையை நிகழ்த்தியுள்ளார்கள் என விமர்சித்தார்.

பேனா நினைவுச் சின்னம்:

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரேசின் வெற்றி ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. மக்களிடம் பெரிய நம்பிக்கையையும், எழுச்சியையும் இளங்கோவன் வழங்கியுள்ளார். திமுக அமைச்சர்கள், மற்ற தோழமை கட்சிகளின் தோழர்கள் திரண்டு வந்து பணியாற்றுகிறார்கள். மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்த கேஎஸ் அழகிரி, பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கருத்துகள் அவர்களின் வயிற்றெரிச்சலை காட்டுகிறது என கூறினார்.

karunanithipenstatue

தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, அக்கட்சிகளின் தலைவர்களின் கடந்த கால தியாகங்கள், பணிகள், செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை மக்கள் மனதில் மையப்படுத்துவதற்காக நினைவு சின்னங்களை அமைக்கின்றனர். கடலுக்கு கீழ் பொருட்காட்சிகள், நகரங்கள் உருவாக்கியுள்ளார்கள். இதனால் சுற்றுசூழல் பாதிக்காது எனவும் பேனா நினைவு சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்