காதல் தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி – கமலஹாசன்
உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் என கமலஹாசன் ட்வீட்.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை பரிமாறிக் கொள்ளும் வகையில், இந்த தினம் கொண்டாடப்படுகிறதது.
இந்த நிலையில், காதலர் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல் தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்’ என பதிவிட்டுள்ளார்.
சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2023